சூறாவளி என்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

0
92

சூறாவளி உருவாகி இன்று கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சூறாவளி ஒன்று உருவாகும் பட்சத்தில் மக்களுக்கு அது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊடாக உடனடியாக அறிவிக்கப்படும் என்பதனை மிகவும் பொறுப்புடன் அறியத்தருகின்றோம்.

சூறாவளி உருவாகி இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

மேலும் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதனால் அனைவரும் வெள்ள அனர்த்தத்துக்குரிய முன்னாயத்தங்களை மேற்க்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here