செந்தில் இரட்டை பிரஜாஉரிமை கொண்டவரா…..?அப்படியென்றால் அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்!

0
180

கருடனுக்கு வந்த மடல்….

நடிகை கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என்பதால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கினார்கள்.கும்பகோணத்தை பிறப்பிட்மாக கொண்ட ஊவாமாகாண அமைச்சர் செந்தில் எப்படி அமைச்சராக இருக்க முடியும் எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

செந்திலுக்கு அடியாட்களாக முக்கியமான 7 பேர் அளவில் இருக்கிறார்கள்,அதில் மிக முக்கியமான அடியாட்கள் தான் அடிவாங்கிய கணேசமூர்த்தியும்,அடித்த வெள்ளிகண்ணனும்,அசோகாவும்.

கணேசமூர்த்தி ஒன்றும் கைசுத்தமான ஆள் இல்லை செந்திலுக்காக கட்டைபஞ்சாயத்து, கொமிஷன் பொறுப்பு என இதர பொறுப்பு எல்லாமே இவர்தான் அதன் பிரதி உபகாரம்தான் மாகாணசபை உறுப்பினர் பதவி.இவரை திருடன் எனசொன்னால் அது செந்திலையும் சேர்த்து தான். மாகாணசபை உறுப்பினரானதும், அட………….நானும் மாகாண சபை உறுப்பினர்,செந்திலும் மாகாணசபை அவரை ஏன் நான் மதிக்கணும் எனும் எண்ணம் கணேஷமூர்த்திக்கு.விளைவு……… செந்திலுக்கு கிடைத்து வந்த வருமானத்தில் கைவைக்க தொடங்கினார் கணேஷ்.

வேலை வாங்கி தருகின்றேன்,வெளிநாட்டுக்கு அனுப்புகின்றேன்,அனுமதி பத்திரங்கள் பெற்றுத்தருகிறேன்,அபிவிருத்தி திட்டங்களுக்கான கொமிஷன் என பல வழிகளிலும் பெற்றுவந்த பணம் செந்திலுக்கு செல்லவில்லை,இதனால் மெது மெதுவாக முறுகல் ஏற்பட தொடங்கியது.விஷயம் மாமா ஆறுகத்தாருக்கும் எட்டியது. தன் கோட்டை கொட்டகலை சிஎல்எப் க்கு கணேஷமூர்த்தி அழைக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதாக தகவல்.இதனால் வெறுப்புற்றிருந்த கணேசமூர்த்தியை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேள் சுரேஷும்,அரவிந்தகுமாரும் மெதுவாக பேரம் பேசி ஐதேக வுக்குள் இழுத்து விட்டு விட்டனர். கணேஷமூர்த்தியை கொத்துவதற்கு இதொகாவின் செந்திலணி தருணம் பார்த்திருந்தது.

ஊவாவின் அதிபர் பவானியின் பிரச்சினை தலையெடுக்கும் போதே கணேஷமூர்த்தியின் களையெடுப்புக்கான திட்டமிடலும் தொடங்கிவிட்டது.சந்தர்ப்பத்திற்காக செந்திலணி காத்திருந்தது.முதலமைச்சர் சாமர தஸநாயக்கவின் கல்வியமைச்சர் பதவி காலியாக போகின்றது எனும் தகவல் கிடைத்ததுமே ஆறுமுகத்தாரும்,செந்திலும்,ரமேஷ்வரனும் தமிழ்கல்வியமைச்சை பெற்று ஆசிரியர்களுக்கு ஒரு ஆட்டம் காட்டவும்,சரிந்து வரும் செல்வாக்கினை இழுத்துப்பிடிக்கவும் கல்வியமைச்சை கேட்டு ஜனாதிபதியினை நச்சரிக்கத்தொடங்கி விட்டனர்,பெரிய வேண்டுதலுக்குப்பின் தமிழ் கல்வியமைச்சை பெற்றுக்கொண்ட வேகத்தில் வரவேற்பு நிகழ்வுக்கு மாகாணசபைக்கு சென்றார் செந்தில்.அன்று நடந்த கூட்டத்துக்கு கணேஷமூர்த்தியும் வருவார் என்பதால் அவரை தாக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன, எனவே முன்கூட்டியே மாகாணசபை வளாகத்துக்குள் சம்பந்தபட்டவர்களின் ஆசீர்வாதத்துடன் வெள்ளிக்கண்ணும்,அசோகவும் இன்னும் சிலரும் காத்திருந்தனர். கணேஷமூர்த்தி தாக்கப்படுவார் என்பதை அமைச்சர் ஹரின்பெர்ணாண்டோ உட்பட கணேஷமூர்த்தியும் அறிந்திருந்தார் எனவேதான் ஹரின் பெர்ணாண்டோவின் வாகனத்தி இவர் வந்திருந்தார்.

செந்திலணிதான் தாக்குகிறது என்பது தெரியாமலிருக்கத்தான் ஹொரா,ஹொரா என கத்திக்கொண்டு அடித்தனர்.பாவம் யார் யார் ஹொரா என்பது ஊரே அறியும்.

மலைக்கள்ளன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here