தியத்தலாவை வைத்தியசாலையில் கொவிட் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் இயந்திரத்தின் தேவையானது நீண்டகால குறைப்பாடாக காணப்பட்டு வந்த நிலையில் சுகாதார அமைச்சின் ஊடாக பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்குவதற்கான வேண்டுகோளை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான், விடுத்திருந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக PCR இயந்திரம் கிடைக்காமல் காலத்தாமதம் ஏற்பட்டமையால் செந்தில் தொண்டமானின் தனிப்பட்ட ஏற்பாட்டில், நட்பு ரீதியாக டயமன் கேட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செந்தில் தொண்டமான் 65 இலட்சம் ரூபா பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரமொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளிப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் அந்த பி.சி.ஆர். இயந்திரம் தியத்தலாவை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பி.சி.ஆர். இயந்திரத்தை வழங்கும் நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தேனுக விதானகமகே, மேஜர் சுதர்ஷன தெனிபிடிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த பி.சி.ஆர். இயந்திரத்தின் ஊடாக பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆய்வுக்கூடத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க செந்தில் தொண்டமான் ஏற்பாட்டு செய்து தருவதாக தெரிவித்தார்.
PCR இயந்திரத்தை பெற்றுக் கொடுத்தமைக்காக பதுளை மாவட்ட மக்கள் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து உள்ளனர்