கொரோனாவின் தாக்கத்திற்கு உட்பட்டு நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட சென்கூம்ஸ் தோட்டம் முடக்கப்பட்டதோடு பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தன் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காத நிலையில் லென்தோமஸ் தோட்ட மக்கள் தன் ஒருநாட் சம்பளத்தை ஒதுக்கி அதனூடாக உலர் உணவு பொருட்கள் பொதியை 18/05/2021 வழங்கியுள்ளனர். இச்செயலுக்கு சென்கூம்ஸ் மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்