திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்து 09.08.2018 அன்று காலை 9 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் சென்.கிளயார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற குறித்த லொறி சென்.கிளயார் பகுதியில் மண்மேடு ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் சாரதி மற்றும் அதிகாரி ஒருவரும், உதவியாளர் ஒருவரும் பயணித்துள்ளதாகவும், இவர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மழை காரணமாக வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)