கூட்டு எதிர்கட்சியின் ஊடாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம்திகதி கொழுப்பில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கபட உள்ள போராட்டத்தில் லட்ச்சகணக்கான மக்களோடு மாபெரும் எழுச்சி பேராட்டத்தில் ஈடுபட உள்ளதோடு பெறுந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையும் இணைத்து கொண்டு தோட்ட தொழிலாளர்களுக்கான நியாமான சம்பளத்தினை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட உள்ள தொழிற்சங்கங்கள் பெற்று கொடுக்கவேண்மென வழியுருத்த உள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05ம் திகதி இடம்பெறவிருக்கின்ற பாரிய எழுச்சி ஆர்பாட்டத்திற்கு மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளை சார்ந்த எங்களது தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு கூட்டு எதிர்கட்சியின் தமிழ்பிரிவு பொருப்பாளரும் மலையக தேசிய முன்னணியின் தலைவருமான ரிசி செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.
எனவே அவர்விடுத்துள்ள ஊடக அறிக்கையிலே மேலும் தெரிவித்துள்ளவாவது இன்று நல்லாட்சி என்ற பெயரில் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் பொருட்களின் விலையேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்றவாறு தோட்ட தொழிலாளர்களுக்கான வேதனம் கிடைக்கபெருவதும் இல்லை ஆகையால் தான் எமது தோட்ட தொழிலாளர்களுக்கு இம் முறை உரிய வேதனத்தை பெற்று கொடுக்கவேண்டுமென இந்த எழுச்சி போராட்டத்தின் போது வழியுருத்த பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த எழுச்சி ஆர்பாட்டமானது இலங்கையின் வரலாறு காணாத அளவிற்கு மேற்கொள்ளபட விருப்பதாகவும் எமது அனைத்து உறவுகளையும் இதில் கலந்து கொள்ளுமாறு கூட்டு எதிர்கட்சியின் தமிழ்பிரிவின் பொருப்பாளரும் மலையக தேசிய முன்னணியின் தலைவருமான ரிசீ செந்தில் அழைப்பு வித்துள்ளதாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் அழைப்புவிடுக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்



