அனல் மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின் தடை நடைபெறலாம் என்றும் அது தொடர்பான விபரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் இலங்கை மின்சார சபை அறிவித்திருக்கிறது.
நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் கலாநிதி சுசந்த பெரேரா இதனைத் தெரிவித்தள்ளார்.
அனல் மின் நிலையங்களில் எண்ணெய் தீர்ந்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும். எண்ணெய் தீர்ந்துள்ளதால், வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்பிற்கு சுமார் 183 மெகாவோட் மின் இழப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாரயிறுதியில் ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான மின்சாரத் தேவையினால் இன்று மின்வெட்டுத் தேவைப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.