சரத்குமார் மற்றும் தமிழ் திரை உலகில் பிரபல இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான படம் ஹிட் லிஸ்ட். இந்த படத்திற்காக சிறந்த புதுமுக நடிகராக விஜய்கனிஷ்கா துபாயில் நடந்த சைமா விருது விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்து விக்ரமன் வெளியிட்டுள்ள பதிவில், “துபாயில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் 2024-ம் ஆண்டின் சிறந்த புதுமுகமாக என் மகன் விஜய் கனிஷ்கா தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற போது வாக்கு அளித்து சப்போர்ட் பண்ணிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்தார். மேலும், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், தனது மகனின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த இந்த விருது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது விஜய் கனிஷ்காவுக்குக் கிடைத்த 3-வது விருது. இதற்கு முன்னர் எம்.ஜி.ஆர் – சிவாஜி விருது மற்றும் மலேசியாவில் நடைபெற்ற எடிசன் திரைப்பட விருது ஆகிய விருதுகளை விஜய் கனிஷ்கா பெற்றுள்ளார். விருதுகளுக்கு விஜய் கனிஷ்கா தகுதியானவர்தான் என்பதை ‘ஹிட் லிஸ்ட்’ படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரியும்“. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.