சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

0
148

அடுத்த பெரும் போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை தயார் செய்வதற்காக ஏக்கருக்கு 20,000 ரூபா வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு மீள அறவிடப்படாத பணமாக இதனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சோளம் பயிர்ச்செய்கைக்கு தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கால்நடை தீவனத்தை தயாரிப்பதற்கு தேவையான சோள பற்றாக்குறையால் இந்த வருடத்தில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அது தொடர்பில் அவதானம் செலுத்தி இவ்வாறு சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here