மலையகத்தின் தேசிய தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவருமான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் 19 வது சிரார்த்த தினம் 30.10.2018 அனுஷ்டிக்கபடுகின்றது.
இதனையொட்டி பழைய பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அன்னாரின் உருவ சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ,மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், முன்னால் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் , மத்திய மாகாண முன்னால் விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிப்பதையும் இதன்போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் மற்றும் உறுப்பினர்கள், இ,தொ,காவின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்