ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அனுராதபுரத்தில் நேற்றும் இன்றும் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்காமல் இ.தொ.கா புறக்கணித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் 2 வருட பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு அனுதாபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு இ.தொ.காவின் முக்கியஸ்த்தர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்துள்ளனர்.
எனினும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். இ.தொ.கா ஏன் கலந்து கொள்ளவில்லை என நாம் வினவியபோது,
தற்போது மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறன ஒரு நிகழ்வு தேவையா என்பதற்காக இந்நிகழ்வில் பங்கேற்காமல் இ.தொ.கா புறக்கணித்துள்ளது என இ.தொ.காவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.



