முன்னாள் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அமெரிக்க பரஸ்பர வரிகளை 20 சதவீதமாகக் குறைத்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார். இதனால் இலங்கைப் பொருட்கள் போட்டித்தன்மையுடன் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு தனது கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர், பரஸ்பர வர்த்தகத்தின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு கணிசமான வரி செலுத்தும் நிலை இல்லாமல் இலங்கை பாதுகாக்கப்பட்டதால் இது ஒரு சாதனை என்று கூறினார். பிராந்தியத்திலும் பிற பகுதிகளிலும் உள்ள நாடுகள் வர்த்தக இடைவெளிகளைக் குறைப்பதற்காக விமானம் உட்பட ஏராளமான பொருட்களை கொள்வனவு செய்தன, ஆனால் இலங்கை அதை வேறுவிதமாகப் கையாண்டது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அமைதியான அணுகுமுறை மற்றும் நடைமுறைத் தலைமையின் விளைவாகவே இது சாத்தியமானது என்று அவர் கூறினார்.