ஜூன் மாதத்தில் கோழி இறைச்சி விலை 1500 ரூபாயாகவும், முட்டை விலை 45 ரூபாயாகவும் அதிகரிக்க வாய்ப்பு

0
135

கால்நடைகளுக்கான உணவுப் பொருள்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்தில் கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1500 ரூபாயாகவும், கோழி முட்டை ஒன்றின் விலை 45 ரூபாயாகவும் அதிகரிக்குமென தேசிய கால்நடை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மஞ்சுலா சுமித் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான உணவுகள், ஏனைய செலவுகள் அதிகரித்துள்ளதால் சிறிய, நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் தங்களது வர்த்தக செயற்பாடுகளில் இருந்த விலகியுள்ளதாகவும், இந்நிலை தொடருமாக இருந்தால் பாரியளவிலான கால்நடை வளர்ப்பாளர்கள் மாத்திரமே நாட்டில் எஞ்சுவார்கள். இதனூடாக சர்வாதிகார போக்கு உருவாகுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் கால்நடைகளுக்கான உணவு டொன் ஒன்றின் விலை 98 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது. எனினும் தற்போது இதன் விலை மும்மடங்காக அதிகரித்து இரண்டு இலட்சத்து 78 ஆயிரமாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here