ஜேர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் பலர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியின் ரைன்லேண்ட் (Rhineland) உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், அங்குள்ள கட்டிடங்களில் வெள்ளநீர் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் பெல்ஜியத்திலும் 11 பேர் உயிரிழந்ததுடன், நெதர்லாந்திலும் பாதிப்பேற்பட்டுள்ளது.