ஜே.வி.பியினர் அட்டனில் ஆர்ப்பாட்டம் – நால்வர் கைது

0
211

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here