ஞாயிற்றுக்கிழமைகளில்¸ பாடசாலை மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதால் அவர்களால் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களுக்குச் செல்ல முடிவதில்லை. இதனடிப்படையில்¸ விரைவில் ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் தனியார் வகுப்புக்களுக்கு தடைவரலாம்.
இதற்கான சுற்று நிருபங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை விரைவில் வெளியிடப்படும் என புனர்வாழ்வு¸ மீள் குடியேற்றம்¸ இந்து கலாசார அபிவிருத்தி¸ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் தெரிவித்தார்.
அவர் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்¸ இந்த நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும்¸ நல்லவர்களாகவும். கல்விமான்களாகவும் இருக்க வேண்டும் என்பது எல்லோரது மனதிலுமுள்ள ஆசையாகும். இதற்கான நல்ல பண்புகளையும்¸ பழக்க வழக்கங்களையும் இளமையிலிருந்தே வழங்குகின்ற பணியை¸ இந்து சமயத்தைப் பொறுத்தவரை அறநெறிப்பாடசாலைகள் செய்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதால் மாணவர்கள்¸ அறநெறிப்பாடசாலைகளை தவிர்த்து வருவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.