டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து!

0
101

கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால், குறிப்பாக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட 10க்கும் மேற்பட்ட முறை கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என்றும் குறிப்பிட்டார்.

நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் குறிப்பிட்டார்.

அவர் தவறு செய்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுங்கள், ஆனால் அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here