டயகமவில் நான்கு வீடுகளின் முன்பகுதி சுவர்கள் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளன….

0
174

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொணிங்டன் தோட்டத்தில் நான்கு வீடுகளின் முன்பகுதி சுவர்கள் திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.

இச்சம்பவம் 07.09.2018 அன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு வீடுகளை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிறுவர்கள் 2, ஆண்கள் 7, பெண்கள் 10 பேர் அடங்குவர்.

டயகம பிரதேசத்திலிருந்து தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் ஆக்ரா ஆற்றுக்கு அருகாமையில் 1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்டுள்ள நான்கு வீடுகளை கொண்ட தொடர் வீடுகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன் பாரிய வெடி சத்தம் ஒன்று கேட்டதாகவும், அதனைத் தொடர்ந்தே குறித்த வீடுகளின் முன் பகுதி சுவர்கள் திடீரென சரிந்து வீழ்ந்ததாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களை தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராமசேவகர் ஊடாக டயகமை பொலிஸார் மற்றும் நுவரெலியா மாவட்ட இடர்முகாமைத்துவ  மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளையில் சம்பவம் தொடர்பில் காரணம் கண்டறியப்படவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மொணிங்டன் தோட்ட பிள்ளை பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பு கருதி தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here