ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் ஆரம்பபிரிவு பரிசோதனை பிரிவு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் தலைமையில் இன்று (03) திறந்து வைக்கப்பட்டது.
டிக்கோயா வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவும்,வைத்தியசாலையில் தங்கி நின்று சிக்சைப்பெற்றுக்கொள்பவர்களின் வசதி கருதியும் குறித்த பிரிவு நிர்மானிக்கப்பட்டுள்ளது
இந்த பிரிவுவின் மூலம் நோயாளர்களின் நோய் மற்றும் பரிசோதனை முடிவுகள் விரைவாக செய்யப்படும் இதனால் விணான கால தாமதம் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் நோயாளர்கள் பரிசோதனைகள் மூலம் இனங்கண்டு அவர்களை உரிய வாட்டுக்களுக்கும் சிகிச்சைக்கும் உட்படுத்த முடியுமென வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இதன் போது வைத்திய உபகரணங்கள் சில வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி கருத்து தெரிவிக்கையில்…
மலையகத்தில் உள்ள வைத்தியசாலைகளில் மிக முக்கியமான மற்றும் பிரதானமான வைத்தியசாலைகளில் இது ஒன்றாகும் கடந்த காலங்களில் இந்த வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதிகாரிகளின் இடம் மாற்றம் காரணமாக அந்த அபிவிருத்தி வேலைத்தி;ட்டங்கள் தாமதமடைந்தன.
எனினும் இந்த வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய தேவை மிகவும் அவசியமாக காணப்படுகின்றது காரணம் தோட்டப்பகுதியில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தங்களுக்கு நோய் ஏற்படும் போது இந்த வைத்;தியசாலையை தான் நாடி வருகின்றனர்.எனவே இந்த வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று எமது ராஜங்க அமைச்சர் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.;
கடந்த காலங்களில் இப்பகுதியில் பாரிய அளவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்திருந்த போதிலும் இறப்பு வீதம் மிக குறைவாகவே காணப்பட்டன அதற்கு இந்த வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டமையே காரணம் கடந்த காலங்களில் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்த வைத்தியசாலைக்கு தான் வருகை தந்திருந்தேன் வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதன் காரணமாகத்தான் நானும் உயிரோடு இருக்கிறேன்,
இந்த பிரதேசத்தை சேர்ந்தவன் என்ற வகையில் இதில் உள்ள குறைபாடுகள் என்ன என்பதனை நான் நன்கு அறிவேன் ஆளனி மற்றும் வைத்திய உபகரணங்கள் குறைபாடு காரணமாக நோயாளர்களுக்கு சிகிச்கையளிக்கும் போது பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
எதிர்க்காலத்தில் எமது பிரதேச மக்களின் தேவை கருதி இந்த வைத்தியசாலைக்கு தேவையானவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எமது ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் உதவியுடன் முன்னெடுக்க தயங்க மாட்டடேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
வைத்தியசாலையின் வைத்திய முகாமையாளர் தரிந்த வீரசிங்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கணபதி கணகராஜ்,நோர்வூட் பிரதேசசபைத் தலைவர் கே.கே.ரவி இணைப்பாளர் அர்ஜூன் உதவி வைத்திய முகாமையாளர்; அருள் குமரன், உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கே.சுந்தரலிங்கம்



