நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கல தோட்டத்தில் காற்றினால் கூரைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேலு ஊடாக உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளிற்கு இணங்க இவ் உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டன.நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற சீரற்ற காலநிலையால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் காற்றினால் கூரைகள் அல்லுண்டு நிர்க்கதியான டிக்கோயா பட்டல்கல தோட்டத்தில் 20 குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்