டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாக். வீரர்கள் பாபர், ஃபகர் ஸமான் உடற்தகுதியில் சந்தேகம்

0
44

டி20 உலகக் கோப்பை தேர்​வின்​போது பாகிஸ்தான் கிரிக்​கெட் அணி வீரர்​கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்​தகு​தி​யின்றி இருந்​த​தாக சந்​தேகம் எழுந்​துள்​ள​தாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​தின் (பிசிபி) மருத்​து​வக் குழு தெரி​வித்​துள்​ளது.

கடந்த பிப்​ர​வரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் நடை​பெற்​றது. இதில் இந்​தியா சாம்​பியன் பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொண்​டது. பாகிஸ்​தான் அணி, சூப்​பர் 8 சுற்​றுடன் வெளி​யேறியது

இந்​நிலை​யில் பாகிஸ்​தான் அணி​யில் இடம்​பெற்​றிருந்த வீரர்​கள் 100 சதவீத உடற்​தகு​தி​யுடன் இருந்​தார்​களா என்று தேர்​வுக்​குழு மூத்த உறுப்​பினர் ஆகிப் ஜாவித் சந்​தேகம் எழுப்​பி​யிருந்​தார். மேலும் இதுதொடர்​பாக விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் என்​றும் அவர் கோரிக்கை விடுத்​தார். இந்​நிலை​யில் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய மருத்​து​வக் குழு​வில் பிரிட்​டனைச் சேர்ந்த டாக்​டர் ஜாவேத் முத்​கல் இணைந்​துள்​ளார்.

இதுதொடர்​பாக டாக்​டர் ஜாவேத் முத்​கலுக்கு நெருக்​க​மான வட்​டாரங்​கள் கூறிய​தாவது: அணி​யில் இடம்​பெற்​றிருந்த பாபர் அஸாம், ஃபகர் ஸமான் ஆகியோர் 100 சதவீத முழு உடற்​தகு​தி​யுடன் இல்​லை. உலகக் கோப்பை போட்​டிக்​குப் பின்​னர் அவர்​களை பரிசோ​தித்த டாக்​டர் ஜாவேத் முத்​கல், இத்​தகவலைத் தெரி​வித்​துள்​ளார்.

உலகக் கோப்​பைப் போட்​டிக்​குப் பின்​னர், பாகிஸ்​தானில் நடைபெறும் டி20 போட்​டி​யில் விளை​யாடப் போவ​தில்லை என்று பாபர் அஸாம் அறி​வித்​துள்​ளார். தசை​நார் முறி​வு, எரிச்​சல் போன்​றவற்றால் தான் அவதிப்​படு​வ​தாகத் தெரிவித்துள்ளார். இதே பிரச்​சினை தனக்கும் இருப்​ப​தாக ஃபகர் ஸமானும் தெரி​வித்​துள்​ளார். பாபர் அஸாமை மருத்​து​வர், பரிசோ​தித்​த​போது, அவரது காயம் ஆரம்​பத்​தில் கண்​டறியப்​பட்​டதை விட மிக​வும் தீவிர​மான​தாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது.

அதேவேளை​யில், ஃபகர் ஸமானும் கடந்த சில மாதங்​களாக இதே பிரச்​சினை​யால் அவதிப்​பட்டு வரு​கிறார். ஆனால், பாகிஸ்​தான் அணி​யின் பிசி​யோதெரபிஸ்ட் கிளிஃப் டீக்​க​னிட​மிருந்து ஒப்​புதல் பெற்ற பின்​னரே, உலகக் கோப்பை அணி​யில் பாபர் மற்​றும் ஃபகர் ஆகியோரைத் தேர்வு செய்​த​தாக, தேசி​யத் தேர்​வுக் குழு​வின் மருத்​துவ பிரி​விடம் தெளிவுபடுத்​தி​ய​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, போட்​டிக்கு முன்​னரே அவர்​களுக்கு காயம் ஏற்​பட்​டிருக்​கவேண்​டும். வீரர்​களு​ட​னான தனது நெருங்​கிய உறவின் காரண​மாக, லேசான காயங்​கள் இருந்​த​போ​தி​லும் அவர்​களை விளை​யாட பிசி​யோதெரப்​பிஸ்ட் டீக்​கன் அனு​ம​தித்​துள்​ளார். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. எனவே, இதுதொடர்​பாக வி​சா​ரணை நடத்​தப்பட வேண்​டும் பாகிஸ்​தான்​ கிரிக்​கெட்​ வாரி​யத்​துக்​கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here