டுரியான் சாப்பிட்டால் உடலிலுள்ள கொழுப்பு அதிகரிக்குமா?

0
144

ஒரு காலத்தில் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்தப் பழங்கள் தற்போது ஆண்டு முழுதும் கிடைக்கின்றன.
டுரியான் பழங்களை அதிகம் உண்டால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று சிலர் சொல்லக் கேட்டிருப்போம்.

அது உண்மையா?

இல்லை என்கிறது ஆய்வு.

உடலில் சேரக்கூடிய கொழுப்பின் அளவைத் தடுக்கக்கூடிய ஆற்றல் டுரியான் பழத்துக்கு இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

இருதயத்துக்கு ஆரோக்கியமான “monounsaturated fats”இன் அளவு டுரியான் பழத்தில் அதிகம் உள்ளது. இது உடலில் தங்கக்கூடிய கெட்ட கொழுப்பான LDLஇன் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
விளம்பரம்

2019இல் சுல்தான் ஸைனால் அபிடின் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் மலேசியா, தாய்லந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலுள்ள டுரியான் பழங்களில் அதிக நன்மைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த நன்மைகள்?

— டுரியானிலுள்ள anti-hyperglycaemic ரத்தத்தில் உள்ள இனிப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது

— anti-atherosclerotic தன்மை ரத்தம் உறைவதைத் தடுக்கிறது

— டுரியானில் ‘probiotic’ எனும் நல்ல பேக்டீரியாவின் அளவு அதிகம் உள்ளது
விளம்பரம்

— வீரியமிக்க செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய anti-proliferative தன்மை உண்டு

— வைட்டமின்களும் கனிமங்களும் (minerals) நிறைந்துள்ளன

டுரியான் பழத்தைச் சாப்பிட்டவுடன் “பீர்” குடித்தால் இறந்துவிடுவார்கள் என்ற மற்றொரு கட்டுக்கதை இருப்பதாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது. அதனை நிரூபிக்கக்கூடிய அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அத்தகைய சம்பவங்களும் பதிவாகவில்லை.

ஆனால் அவ்வாறு உட்கொள்ளும்போது, செரிமாணக் கோளாறு ஏற்பட்டு வயிறு உப்பிக் கொள்ள வாய்ப்புள்ளது. கொழுப்பு, இனிப்பு ஆகிய இரண்டையும் கரைக்க கல்லீரல் ஒரே நேரத்தில் அதிகம் வேலை செய்யவேண்டியிருக்கும். அதனால் உடலில் இந்தக் கோளாறுகள் ஏற்படலாம் என்று The Star செய்தி குறிப்பிடுகிறது.

எந்த உணவானாலும் அதை அளவோடு உட்கொண்டால் சிறப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here