டூடுல் விட்டது கூகுள்!

0
9

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தினமும் காதலை வளர்த்தாலும் காதலர் தினத்தை தங்களது ‘ஸ்பெஷல்’ தினமாக காதலர்கள் கருதுகிறார்கள். எனவே அவர்கள் கடற்கரை, பூங்கா, வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் அதிகளவில் கூடுவார்கள்.

இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். அந்த வகையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

இந்த டூடுல் குறித்து கூகுள் தெரிவித்திருப்பதாவது:- “இன்றைய டூடுல் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது. கைகளால் செய்யப்பட்ட பரிசுகளின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் ஒரு இதயப்பூர்வமான குறிப்பை எழுதினாலும், சுவையான விருந்தை தயார் செய்தாலும் அல்லது ஒரு சிறப்பு உணவுக்குத் தயார் செய்தாலும், நாம் அக்கறை கொண்டவர்களைக் கொண்டாட இது ஒரு அற்புதமான வாய்ப்பு. காதலர் தின வாழ்த்துக்கள்!” இவ்வாறு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here