ட்ரோன் தாக்குதல் எச்சரிக்கை: ஆஸ்கர் விழாவுக்கு பாது​காப்பு அதிகரிப்பு

0
2

அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் 98-வது ஆஸ்கர் விருது வழங்​கும் விழா, மார்ச் 15-ம் தேதி கோலாகல​மாக நடை​பெற இருக்​கிறது. உலகம் முழு​வதும் உள்ள திரைக்​கலைஞர்​கள் இந்த விருது அறி​விப்​பை​யும் விழாவை​யும் ஆவலாக எதிர்​நோக்கி உள்​ளனர். இந்​தக் கொண்​டாட்ட விழாவுக்​கான ஏற்​பாடு​கள் ஏற்​கெனவே தொடங்கிவிட்டன.

நகைச்​சுவை நடிகர் கோனன் ஓ’பிரையன் நிகழ்ச்​சியை தொகுத்து வழங்​கு​கிறார். பல்​வேறு நாடு​களி​லிருந்து திரைக்​கலைஞர்​கள் சிறப்பு அழைப்​பாளர்​களாக அழைக்​கப்பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் அமெரிக்கா​வுக்​கும் ஈரானுக்​கு​மான போர் காரண​மாக மத்​திய கிழக்கு நாடு​களில் கடும் பதற்​றம் நில​வு​கி​றது.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் ஈரான் மீது நடத்​திய கூட்டு ஏவுகணைத் தாக்​குதலில் ஈரான் தலை​வர் அயதுல்லா அலி காமேனி கொல்​லப்​பட்​டார். இதனால் ஈரான், அமெரிக்​கத் தளங்​களை​யும், இஸ்​ரேலில் உள்ள ராணுவ இலக்குகளையும் குறி​வைத்​துத் தாக்​குதல் நடத்தி வருகிறது. இந்​தப் போர் வளை​குடா நாடு​களி​லும் கடும் பாதிப்பை ஏற்​படுத்தி இருக்​கிறது.

இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் மேற்கு கடற்​கரை பகுதிகளில் ஈரான் ட்ரோன் தாக்​குதல் நடத்​தலாம் என்று அமெரிக்​கப் புல​னாய்வு அமைப்​பு (எஃப்​.பி.ஐ) எச்சரித்துள்ளது. இதனால் ஆஸ்​கர் விருது விழா நடை​பெறும் பகு​தி​யில் முன் எப்​போதும் இல்​லாத வகை​யில்​ ​பாது​காப்​பை கலி​போர்​னி​யா நிர்​​வாகம்​ பலப்​படுத்​தி இருக்​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here