தந்தையின் இறுதிச் சடங்கில் 31 வயது மகனும் உயிரிழப்பு: யாழில் சோக சம்பவம்

0
75

யாழில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டியிருந்து வருகை தந்த மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (jaffna) – காரைநகர், மணற்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.மணற்காடு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் லண்டன் (london) சென்றிருந்த நிலையில், தந்தையின் மரணம் காரணமாக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இதன்போது இறுதிச் சடங்கில் திடீரென மயங்கி கீழே விழுந்து காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.மேலும் அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணம் எனவும், ஒரே நேரத்தில் இரண்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காரைநகர் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here