தனது குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!

0
198

இந்தியாவில் தமிழகத்தில் பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு தாயொருவர் கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 23 வயதான மணிகண்டனுக்கும் 19 வயதான சினேகா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், சில மாதங்களில் கர்ப்பமாகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்ற சினேகாவின் தாய் மற்றும் தந்தை கேரளாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது பாட்டி சரசு என்பவர் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 22ம் திகதி காலையில் குளிக்க சென்றுவிட்டு திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை என்றும் யாரோ தூக்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வீட்டிற்குள் சோதனை செய்த போது குழந்தை சடலமாக நீர் நிறைந்த பால் கேனிற்குள் இருந்துள்ளது.இதனை அவதானித்த பொலிஸார் பாட்டி சரசு மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இதில் திருப்பம் என்னவெனில் குழந்தையை கொலை செய்தது தாய் சினேகா என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.இதில் சினேகாவை விசாரித்த போது, வறுமையின் காரணமாக வளா்க்க முடியாது என்பதால் குழந்தையை பால் கேனில் போட்டு மூடிவிட்டு காணவில்லை என புகாா் செய்தேன் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, தெற்கு காவல் நிலைய பொலிஸார் கொலை வழக்குப் பதிந்து சினேகாவை கைது செய்து உத்தமபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here