தனது வரலாற்றை தானே எழுத ஆரம்பிக்கும் ரணில்

0
3

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 50 வருட தனது அரசியல் வாழ்க்கை வரலாற்றை எழுத தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் 1973 இல் பியகம தொகுதி அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார் மற்றும் 1977 முதல் 2022 வரை நாடாளுமன்ற சபாநாயகர் தவிர அனைத்து பதவிகளையும் வகித்த மிக மூத்த அரசியல்வாதியும் ஆவார்.

பின்னர் அவர் 2022 முதல் 2024 வரை நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக பணியாற்றினார்.1994 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி தற்போது சர்வதேச ஆலோசகராக செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, 1970 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு அடுத்தபடியாக ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டில் தற்போது வாழும் அரசியல்வாதிகளில் மூத்தவர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here