தபால் திணைக்கள ஊழியர்களின் மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது.
14 கோரிக்கைகளை முன்வைத்து தபால் திணைக்கள ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மேலதிக நேர வேலைப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 12ம் திகதி ஆரம்பமான இந்த வேலைப் பகிஷ்கரிப்பு காரணமாக தற்போதைக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் கொழும்பு பிரதான தபால் நிலையத்தில் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக தபால் திணைக்களத்தின் அன்றாட அலுவல்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள தபால் திணைக்கள ஊழியர் சங்க முக்கியஸ்தர் சிந்தக பண்டார, தபால் திணைக்களத்தில் சுமார் இரண்டாயிரம் வெற்றிடங்கள் காணப்படுகின்றது.
இவற்றை ஏனைய ஊழியர்களின் மேலதிக நேர வேலைகளின் ஊடாகவே பூர்த்தி செய்து கொள்ள நேரிட்டுள்ளது.
இந்நிலையில் தபால் திணைக்கள அதிகாரிகள் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதை விடுத்து , மேலதிக நேரக் கொடுப்பனவை குறைக்க நடவடிக்கை எடுத்தமையே வேலைப் பகிஷ்கரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.