தமிழகத்தில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை!

0
158

இந்தியாவின் தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.குறித்த கப்பல் நேற்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் 14,712 டன் அரிசி, 250 டன் பால் பவுடர் மற்றும் 38 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சரின் பணிப்புரையின் பேரில் இந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் கடந்த மாதம் நாட்டை வந்தடைந்திருந்தது.
அதில் 9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 25 மெட்ரிக் டன் மருந்துகள் அடங்கியிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here