தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட செந்தில் தொண்டமான்!

0
207

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டடுக் ஸ்ரீ எம்.சரவணன் மற்றும் சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டனர்.

இதன் போது தமிழக முதலமைச்சரின் வாழ்நாள் குறித்த குறிப்பிடத்தக்க காப்பக கண்காட்சியை பார்வையிட தமிழக அமைச்சர்களான சேகர் பாபு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் செந்தில் தொண்டமான் உட்பட வருகைதந்த பிரதிநிதிகளை அழைத்துச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here