தமிழ்செல்விக்கு சச்சுதானந்தன் வாழ்த்து.

0
186

இராணுத்தின் பொது சேவைப் படையணியைப் (பொது சேவா பலக்காய) பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்ட பதுளை மாவட்டத்தின் ஸ்பிரிங்வெளி தோட்டத்தின் மேமலைப் பிரிவைப் பிறப்பிடமாகக் கொண்ட மூர்த்தி தமிழ்ச்செல்வி வீராங்கனை இரு வெண்கலப் பதக்கங்களை வெற்றிக் கொண்டு மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்து முழு மலையகத்தையும் பெருமைப்படுத்தியுள்ளதாகவும் இவரின் பாராட்டு பாராட்டத்தக்கதெனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மலையகத்தில் பல திறமையானவர்கள் ஆங்காங்கே காணப்படுகின்றனர்.அவ்வாறு இலைமறைக்காயாய் இருப்பவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும்.அதற்கு இ.தொ.காவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் எப்போதும் உறுதுணையாக நிற்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்ச்செல்வியின் சாதனை மலையகம் கொண்டாடப்படவேண்டியதொன்று இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை இனங்கண்டு அவர்களுக்கான முழு ஊக்கப்படுத்தும் வேலைகளையும் இ.தொ.கா இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் முன்னெடுக்குமெனவும் இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here