தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்தவே மஹிந்த வெளியேற்றம்

0
5

பிரிவினைவாத தமிழ் டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரச மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர கொக்கரித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை நேற்று சந்தித்து பேச்சு நடத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கொக்கரித்துள்ளார்.

” மஹிந்த ராஜபக்சவை அரச மாளிகையில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் பிரிவினைவாத தமிழ் டயஸ்போராக்களே திருப்தியடைவார்கள். அவர்களுக்கே இன்றைய நாள் மகிழ்ச்சியை தரும் நாளாகும். அவர்களை திருப்திப்படுத்துவதற்கான நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச என்பவர் சாதாரண நபர் கிடையாது. முழு உலகமுமே தோற்கடிக்க முடியாது எனக் கூறிய புலிகள் அமைப்பை தோற்கடித்து 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தவர்.

மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கிய தலைவர் அவர் .நாட்டில் அபிவிருத்திகளை எற்படுத்தினார். இப்படிபட்ட தலைவருக்கு இவ்வாறா நன்றிகடன் செலுத்துவது?” – எனவும் சரத்வீரசேகர கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here