தம்புத்தேகம பகுதியில் நேற்றைய தினம் (செப்.26) இடம்பெற்ற கொள்ளை முயற்சி தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ராஜாங்கனை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தம்புத்தேகம தனியார் வங்கியொன்றிலிருந்து 223 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற இரண்டு பேரை ஆயுதங்களுடன் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.