தம்புள்ளையில் முச்சக்கரவண்டி விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி – இருவர் படுகாயம்!!

0
138

தம்புள்ளை – கலேவெல வீதியின் புவக்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றும் மற்றும் டிபர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் கலேவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது முச்சக்கரவண்டியினுள் சாரதி உட்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

இவர்களில் கலேவெல யடிகல்பொத்த பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுகளையுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மரண வீடொன்றுக்கு சென்று மீண்டும் திருப்பி வந்து கொண்டிருந்த போது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் கலேவெல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here