தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
194

இப்பரீட்சை 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்தப்பட்டது. 2023 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தரம் – 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள் இம்முறை தோற்றியிருந்தனர்.

இப்பரீட்சை 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்தப்பட்டது.

அதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் அடுத்த வாரத்தில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

தற்போது சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சையானது ஜனவரி மாதம் திட்டமிட்ட தினத்தில் நடைபெறும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here