தர்மக்கேணி விவசாயிகளுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு!

0
7

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கை ரயில் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும், விவசாய நடவடிக்கைகளுக்கு இடையூறின்றி அதனை அணுகும் வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடும் பொருட்டு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் நேற்றையதினம் குறித்த பகுதியை நேரில்சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

தர்மக்கேணி பகுதியில் ரயில் பாதைக்கு அருகில் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், உடனடியாக அவற்றை இடைநிறுத்துமாறும் ரயில் திணைக்களத்தால் குறித்த விசாயிகள் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.

அதனையடுத்து உரிய தரப்பினருடனான இணக்கப்பேச்சுகளின் மூலம் விவசாயிகளுக்கு போதிய கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் ரயில் திணைக்களத்தின் அனுமதியுடன் குத்தகை அடிப்படையில் குறித்த நிலத்தைப் பெற்று விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உபதவிசாளர் சிவகுரு செல்வராசா, உறுப்பினர் முத்துக்குமார் கவிப்பிரகாஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here