தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்களால் பாதிக்கப்படும் இளம் கனேடியர்கள்!

0
11

இளைஞர் வேலையின்மை அதிகமாக இருக்கும் அதே வேளையில், இளம் கனேடியர்களிடமிருந்து தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலைகளைப் பறிக்க கூட்டாட்சி தாராளவாதிகள் அனுமதிப்பதாக Conservative தலைவர் Pierre Poilievre புதன்கிழமை குற்றம் சாட்டினார்.

நமது இளைஞர்களின் வேலையின்மை கால் நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதால், இந்த ஆண்டு Mark Carney கனடிய இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க சாதனை தொடும் அளவிற்கு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்ப்பதாக Poilievre கூறினார்.

July மாதத்தில் இளைஞர் வேலையின்மை 14.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனடா புள்ளிவிவரத் தரவு காட்டுகிறது. COVID-19 காலத்தை தவிர, 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேலையின்மை வீதம் மிக உயர்ந்தது இதுவே முதல்முறையாகும்.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதிக்கான குடியேற்றத் தரவை அரசாங்கம் வெளியிட்ட சில நாட்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள Poilievre இன் இக் கருத்துக்களில் வெளிநாட்டு தொழிலாளர் விசாக்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த இலக்குகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டினார். இருப்பினும் immigration department  இக்கருத்தை நிராகரித்துள்ளது.

இந்த ஆண்டு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தின் கீழ் 82,000 புதிய தொழிலாளர்களை அனுமதிக்க கனடா இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூட்டாட்சி தரவு காட்டுகிறது. ஆனாலும், ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கனடா குறித்த திட்டத்தின் கீழ் 105,000 விசாக்களை வழங்கியதாக அரசாங்கத்தின் தரவு காட்டுகிறது, இது அரசாங்கத்தின் இலக்கை விட அதிகமாக உள்ளது என்று Poilievre கூறுகிறார்.

இருப்பினும், immigration department அதிகாரி ஒருவர் கூறுகையில், 105,000 எண்ணிக்கையில் ஏற்கனவே கனடாவில் உள்ளவர்களுக்கான புதிய விசாக்கள் மற்றும் புதுப்பித்தல்கள் இரண்டும் அடங்கும். அந்த எண்ணிக்கையில் 33,722 மட்டுமே புதியவர்களுக்கானது, இது இவ்வாண்டிற்கான அரசாங்கத்தின் இலக்கில் சுமார் 42 சதவீதம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here