தலவாகலை டெரீக்கேயார் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் 25பேர் வெளியேற்றம்.

0
186

தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாகலை டெரீக்கேயார் தோட்டபகுதியில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மண் சரிவு அபாயம் 05 குடும்பங்களை சேர்ந்த 25பேர் வெளியேற்ற பட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த அனர்த்தம் 22.05.2018. செவ்வாய்கிழமை விடியற்காலை ஐந்து மணி அளவில் குறித்த லயன் குடியிருப்பின் பின் பகுதியில் உள்ள மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளதாக தலவாகலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இதேவேலை தலவாகலை டெரிக்கேயார் தோட்டத்தில் மண் சரிவு அபாயத்தில் பாதிக்கபட்ட மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு டெரீக்கேயார் தோட்ட முகாமையாளர் வழியுருத்திஉள்ளார்.

இதேவேலை குறித்த லயன் குடியிருப்பு அட்டன் நுவரெலியா பஜரதான வீதிக்கு அண்மையில் அமைந்திருக்கின்றமையால் மண் சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கும் பகுதியில் இருந்து கீழுள்ள பகுதிகளில் வாழும் மக்களையும் அவதானத்துடன் இருக்குமாறு தலவாகலை பொலிஸார் கேட்டு கொண்டுள்ளனர் .

DSC00826 DSC00817 DSC00812

மணி சரிவினால் பாதிக்கபட்டுள்ள 05குடும்பங்களை சேர்ந்த 25பேர்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கான இடங்களை ஒதுக்கிடு செய்து கொடுக்கவும் அவர்களுக்கான உளர் உணவு பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தரின் ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here