தலவாக்கலை கிறேட்வெஸ்டன் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிறேட்வெஸ்டன் பிரதான வீதியில் 06.10.2018 சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கிறேட்வெஸ்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் தலவாக்கலை நகரிலிருந்து கிறேட்வெஸ்டன் நோக்கி வந்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் இதில் பயணித்த ஒருவருமாக மூவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலை பி.கேதீஸ்