தலவாக்கலை நகரம் சுற்றுலா நகரமாக மாற்றும் வேலைத்திட்டம், 100M ரூபா செலவில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.

0
324

நாடு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கும் பொருளாதார நெருக்கடிக்களுக்கும் முகம் கொடுத்துள்ள போதிலும் மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் நிறுத்தப்படவில்லை. எமது நாடு அந்நியச்செலவாணியினை பெற்றுக்கொள்ளும் பல வேலைத்திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையில் நூறு நகரங்கள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய வகையில் தலவாக்கலை நகர்த்தினை சுற்றுலா நகரமாக மாற்றுவதற்காக சுமார் நூறு மில்லியன் ரூபா பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் லெச்சுமணன் பாரதிதாசன் தெரிவித்தார்.

இது குறித்த தலைவர் பாரதிதாசன் கருத்து தெரிவிக்கையில்…..

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது தலவாக்லை நகரத்தினை ஒரு சுற்றுலா நகரமாகமாற்றி அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று அந்த கனவினை நிறைவு செய்யும் வகையில் கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல்வேறு மக்கள் பணிகளை முன்னெடுப்பதற்காக வரலாற்றில் என்றுமே இல்லாதவாறு தலவாக்கலை நகரத்தினை அபிவிருத்தி செய்வதற்கு அவரின் அமைச்சின் ஊடாக நூறு மில்லியன் ரூபாவினை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்த அபிவிருத்தித்திட்டங்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ரமேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். தலவாக்கலை லிந்துலை மக்களின் நலன் கருதி தலவாக்கலை நகர சபைக்கு முன்னுள்ள பகுதியில் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நடை பாதை ஒன்று அமைக்கப்படவுள்ளன. இது மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுகின்றது.

அதே நேரம் பாரம்பரிய தேசிய ஆரோக்கியமான உணவுகளை பெற்றுக்கொடுப்பதற்காக குறித்த பகுதியில் சாலையோர உணவகம் மற்றும் தேசிய உணவு மற்றும் தேசிய பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் பல குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் எமது பிரதேச மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கும் தீர்வுகிடைக்கும். எமது பிரதேசத்தில் உள்ள தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நச்சற்ற மரக்கறிகள், மருந்து வகைகள், பழங்கள், உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்து வருமானத்தினை ஈட்டிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். அதேபோல் பொழுது போக்கு அம்சங்கள் பல உருவாக்கப்படவுள்ள குறிப்பாக இந்த பிரதேசத்தில் மரங்கள் நாட்டப்பட்டு மக்கள் அமரக்கூடிய அமர் நாட்காலிகள் போடப்படவுள்ளன.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பிரயாணிகளை கவரக்கூடிய வகையில் மேல் கொத்மலை ஆற்றில் அணைக்கட்டு பகுதியில் மேல் புறமாக நகரபகுதியில் படகுச்சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதன் மூலமும் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுவதுடன் பிரதேச மக்களின் வருமானமும் பெருகும் ஆகவே இந்த பிரதேசம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தி காணும.

கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் முன்னெடுத்துள்ள இந்த அபிவிருத்தித்திட்டங்களுக்கு தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர்கள் கட்சி தொழிற்சங்க, இன, மத, மொழி பேதமின்றி ஒத்துழைத்து வருகின்றனர். அது எமக்கு பெரும் சக்தியாக உள்ளது.

இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பாரிய அளவு நிதியினை கௌரவ ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கேற்ப ஒதுக்கி தந்துள்ளனர் அதற்காக பிரதேச மக்கள் சார்பாக அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

கே.சுந்தரலிங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here