தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு.

0
181

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை 11.30 மணியளவில் நீர்த்தேக்கத்தில் ஒருவர் மிதந்த படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை பிரதேச மக்கள் கண்டுள்ளனர்.

அதன்பின் மிதந்தவரை காப்பாற்றுவதற்காக பிரதேச மக்கள் போலீசார் அதிரடி படையினர் இளைஞர்கள் என பலரும் முயற்சித்த போதிலும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை இறந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மடக்குபுர தெற்கு பகுதியை சேர்ந்த சுப்பையா சுப்பிரமணியம் வயது 61 இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.

இவரை சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here