தவறு இழைத்ததை ஒப்புக்கொண்ட பசில் ராஜபக்ஷ!

0
186

எங்களின் ஆட்சியின் போது தவறு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaska) ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த விடயத்தை இலங்கை வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலை, தவறான தீர்மானங்கள், காலத்துக்கு காலம் சரியான தீர்மானங்களை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கட்டமைப்பை விரைவாக உருவாக்கினோம். மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த சென்றோம். அங்குதான் எமது அரசாங்கம் தவறிழைத்துள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கருத்து கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here