தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம்- ஜுன் 17 தந்தையர் தினமாகும்!!

0
128

இறைவனை தந்தையே இ அப்பனே என்று அழைக்கும் வழக்கம் எல்லா மதங்களிலும் காணப்படுகிறது. இறைவனை போன்று தந்தை என்பவா் உயிரை உருவாக்குபவா் தாங்குபவா் பாதுகாப்பவா் போசிப்பவா் வழிநடத்துபவர் திருத்துபவா் என்ற பல்வேறு பொறுப்புக்களை கொண்டவராவா்

இறைவனை போலவே ஒரு குடும்பத்திலும் ஒரு தந்தை குடும்பத்தை அன்பு செய்து  பாதுகாத்து போசித்து வழிநடத்தி குடும்பத்தை முன்னேற்றும் பொறுப்புடையவராவா் எந்த குடும்பத்தில் தந்தை இவ்வாறான பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுகிறாரோ அந்த குடும்பம் நிச்சயமாக வளம் பெற்று செழிக்கும்.

இதனால் “ ஒவ்வொரு தந்தையூம் ஒரு படைபாளி என்றே கருதப்படுகிறார். இவ்வாறான ஒரு தந்தை தனது பிள்ளைகளையூம் சிறுவயது முதலே பொறுப்புள்ளவா்களாக வளாப்பதில் கவனம் செலுத்துவார். எந்த குடும்பத்தில் தந்தை மேற்கூறிய பொறுப்புக்களை நிறைவேற்றவில்லையோ அல்லது உதாசீனம் செய்கிறாரோ அந்த குடும்பத்தின வளா்ச்சியிலும் பிள்ளைகளின் முன்னேற்த்திலும் பாதிப்புக்கள் ஏற்படும்.

பெருந்தோட்ட பகுதிகளில் தமது வருமானத்தினதும் தோட்ட வேலை தவிர வேறு தொழில்கள் மூலம் வருமானமீட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு தேடும் வருமானத்தினதும் குறிப்பிடத்தக்க பகுதியை மதுபாவனைக்கு செலவிடும் தந்தையரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொறுப்பற்ற தந்தையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

இவ்வாறான பொறுப்பற்ற செயல்களால் வருமானத்தை வீணடித்துவிட்டு கடன் காரா்களாக ஆகியிருக்கிறார்கள். பெருந்தோட்ட பகுதியை கடன் கலாச்சாரம் வேகமாக விழுங்கி வருகிறது. கடன் வழங்கும் நிர்வனங்கள் வகைதொகையின்றி பெருந்தோட்ட பகுதிகளில் பெருகியிருப்பது வருட வட்டி மாத வட்டி என கடன் வழங்கி வந்த வங்கிகள் கூட கிழமை வட்டி  நாள் வட்டி என மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையூம் கடன் வாங்கும் நாளாக ஆக்குவதில் வெற்றிபெற்றிருப்பதன் காரணம் குடும்பங்களின் விசேடமாக தந்தைமாரின் பொறுப்பற்ற தினத்தின் பெருக்கத்தையே சுட்டிக்காட்டுகிறது.

இதனை கருத்தில் கொண்டு பெருந்தோட்ட பகுதியில் தந்தையா் தினம் போன்ற முக்கிய அனைத்துல தினங்களை அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் குடும்ப விழுமியங்களை மேம்படுத்த முயற்சித்து வரும் பிரிடோ நிறுவனம் இம்முறை தந்தையா் தினத்தை தாங்கும் தந்தையின் கரத்தை பலப்படுத்துவோம் என்ற தொனிப்பொருளோடு கொண்டாட தீர்மானித்துள்ளது.

பல தந்தையா்கள் “தாங்கள் ஒரு படைப்பாளி” என்பதை உணா்வூபூர்வமாக உணா்ந்து பொறுப்புடன் நடந்து கொள்வதால் குடும்பங்கள் முன்னேறி வருவதை காண்பது மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில் பல்வேறு காரணங்களால் வேறு பல தந்தையா்கள் தங்கள் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றாதவா்களாகவோ இருக்கும் பின்னனியில் தந்தையரின் பொறுப்புக்களை உரிய முறையில் அவா்களுக்கு உணா்த்தும் பொறுப்பு மனைவியருக்கும்  பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் உள்ளது.

குடும்ப நலன் கருதி மனைவியூம் பிள்ளைகளும் தந்தையா்களை பொறுப்புள்ளவா்களாக மாற்ற உதவியூம் ஒத்துழைப்பும் வழங்கவேண்டியது அவசியமானதாகும் என்ற கருத்தை சமூக மயமாக்க தந்தையா் தினம் பயன்படுத்தப்பட வேண்டும்..
ஜுன் 17ம் திகதி கொண்டாடப்படும் தந்தையா் தின நிகழ்வில் இந்த கருத்துக்களை முன்வைக்குமாறு சமூக ஆர்வாளர்கள் சமயத்தலைவா்கள் பாடசாலை அதிபா் ஆசிரியா்களை பிரிடோ நிறுவனம் கோருகின்றனர்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here