நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது.
ஆரஞ்சு, ஆப்பிளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு கொடுப்பதில்லை. கொய்யாவானது மிகுதியான நார்ச்சத்தினையும் குறைவான இரத்த சர்க்கரையையும் இயற்கையாகவே கொண்டுள்ளது.
இதை தினம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்
தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.கொய்யாப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்காது.
கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம்.நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
கொய்யா பழம் ரத்தத்தில் அதிகம் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. ரத்தம் அதிகம் கெட்டியாகாமல் அதன் நீர்ம தன்மையை பாதுகாக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
கொய்யா பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மன அழுத்தம் ஏற்படாதவாறு தடுக்கலாம்.




