திமுக தலைவர் கருணாநிதி காலமானதை அடுத்து டெல்லி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார் கமல் ஹாஸன்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 28ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 6. 10 மணிக்கு அவர் காலமானார்.
கருணாநிதியின் மறைவையொட்டி இன்று மாலை முதல் நாளை வரை தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சினிமா நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு நெருக்கமான கமல் ஹாஸன் டெல்லியில் உள்ளார். தகவல் அறிந்த அவர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று இரவே சென்னை திரும்புகிறார். கருணாநிதியின் இழப்பு சினிமா துறைக்கு பேரிழப்பு என்று திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.