“தியான வழியும் திடமான உடல் நிலையும்” என்ற தொணியில் நாடலாவிய ரீதியில் வேலைத்திட்டம்

0
161

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நஞ்சற்ற உணவு வகைகளை உபயோகப்படுத்தி நுவரெலியாவில் உள்ள பௌத்த விகாரைகளின், விகாராதிபதிகள்,தேரர்கள் மற்றும் பிக்குகளுக்கு உணவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் இடம்பெற்றது.

“தியான வழியும் திடமான உடல் நிலையும்” எனும் தொணியில் நாடலாவிய ரீதியில் நடாத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு நிகழ்வாக (03.05.2023) காலை இந்த நிகழ்வு நுவரெலியா சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

அத்துடன் இந் நிகழ்வுக்கு முன்னர் நுவரெலியா நகர மத்தியில் அமைந்துள்ள சம்போதி விகாரையில் அரசமரம் (போதி மரம்) நாட்டி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுகளில் நுவரெலியா மாவட்ட பௌத்த விகாரைகளின் விகராதிபதிகள்,தேரர்கள் கலந்து கொண்டதுடன்,மாவட்ட செயலர் நந்தன கலபட , பிரதேச செயலாளர் பிரகாஷ தனன்சூரிய ,முன்னாள் மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடம்பகமகே,உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here