ஆந்திர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கி காணப்படுகிறது.
நெல்லூர், சித்தூர், விஜயநகரம் குண்டூர், பிரகாசம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரம் நாளை மறுநாள் 21 ஆம் திகதி முதல் மழையுடனான காலநிலை தீவிரமடைந்த எதிர்பார்க்கப்படுகிறது .
கடந்த சில நாட்களாக திருப்பதியில் தொடர் மழை பெய்து வருவதனால் திருப்பதி மலை பாதையில் பாறைகள் சரிந்துள்ளன.
இதன்காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கும்படி திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வார இறுதி நாட்கள் மட்டும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு செல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.