பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை திவி வாத்யா . பிக் பாஸ் தெலுங்கின் 4வது சீசனில் பங்கேற்ற அவர் சில நாட்கள் மட்டுமே உள்ளே இருந்தார். இருப்பினும், அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் ’லம்பசிங்கி` , `கேப் ஸ்டோரீஸ்` , `புஷ்பா 2`, `சிம்பா`, `ருத்ரங்கி`, `ஜின்னா`, `நயீம் டைரிஸ்`, `காட்பாதர்`, `டாக்கு மகாராஜ்` போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், திருமணம் குறித்த திவி வாத்யாவின் கருத்து சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் திவி , திருமணம் குறித்த தனது பயத்தை வெளிப்படுத்தினார். திருமணத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார்.
தனது நட்பு வட்டத்தில் உள்ள திருமணமானவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் பிரிந்துவிட்டதாகவும், அவர்களைப் பார்க்கும்போது, திருமணம் தன்னை பயமுறுத்துவதாகவும் கூறினார். திருமணத்திற்குப் பிறகு பலர் சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் இழப்பதாகவும் கூறினார்.
திவியின் இந்த கருத்துக்கள் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.





