திரையரங்கிற்குள் வெடித்த பட்டாசு ; பதறி ஓடுடிய ரசிகர்கள் (VIDEO)

0
231

இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள். டைகர் 3 படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது கொண்டாடிய ரசிகர்களுக்கு நடிகர் சல்மான் கான் அறிவுரை வழங்கியுள்ளார்.

மணீஷ் சர்மா இயக்கியுள்ள டைகர் 3 படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர்.யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் திபாவளி கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியானது.

படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியின் போது அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர்.

இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் பதறி ஓடும் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் சல்மான்கான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “டைகர் 3 படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது குறித்து கேள்விப்பட்டேன்.இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here