திறமை வெளிப்படும் நாள்… இன்றைய ராசிபலன் – 10.02.2026

0
26

மேஷம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

காலையில் சிறு பதட்டம் இருந்தாலும் பின்னர் சரியாகும்.வேலை தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெற வாய்ப்பு உண்டு. அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு வரலாம்.பொறுமையுடன் பேசினால் பிரச்சினை தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மிதுனம்

இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பான மனநிலையை தரும். எடுத்த முடிவுகளில் உறுதி காணப்படும். வியாபாரத்தில் லாபம் மிதமாக இருக்கும். செலவுகள் திட்டமிடாமல் போனால் சிரமம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் வரும். தேர்வு தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

ஆன்மீகச் சிந்தனை அதிகரிக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள். மன உறுதியால் வெற்றி கிடைக்கும். பழைய முயற்சிகள் இன்று பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. வெளிநாட்டு தொடர்புகள் சாதகமாகும். பயணங்களில் கவனம் தேவை.வாகன ஓட்டத்தில் அவசரம் வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அரசியல் தொடர்புகள் சாதகமாகும். சமூக மரியாதை உயரும். மறைமுக எதிரிகளை கவனிக்க வேண்டும். சட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கை தேவை. கடன் கொடுப்பதை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் தைரியம் தேவை. தலைவலி அல்லது கண் சோர்வு ஏற்படலாம். உணவு கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

கன்னி

கடன் வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வீட்டு விஷயங்களில் மகிழ்ச்சி உண்டாகும். சொத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும். தடைபட்ட வேலை மீண்டும் தொடங்கும். உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகை தரலாம். தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

துலாம்

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். அவர்களின் முன்னேற்றம் சந்தோஷத்தைத் தரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சி பற்றிய பேச்சு எழும். திடீர் செலவுகள் ஏற்படலாம். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் முனைப்பு அதிகரிக்கும். மறைமுக ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

நல்ல செய்தி ஒன்று வரும். உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். அதனால் சிறு பதட்டம் உண்டாகும். ஆனால் சமாளிக்கும் திறன் உண்டு. உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத உதவி வரும். நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறும். மன அழுத்தம் குறையும். தன்னம்பிக்கை உயரும்.

தனுசு

மனதில் உற்சாகம் கூடும். இன்று எடுத்த தீர்மானம் எதிர்காலத்திற்கு நல்லது. தாமதம் இருந்தாலும் வெற்றி உறுதி. நன்றி உணர்வு அதிகரிக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். தன்னலம் பார்க்காமல் நடந்தால் லாபம் பெறலாம். தர்ம காரியங்களில் ஈடுபாடு வரும். உங்கள் புகழ் ஓங்கும் வாய்ப்பு.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

காலம் உங்களுக்குச் சாதகமாக உள்ளது. முயற்சியை கைவிடாதீர்கள். சுய கட்டுப்பாடு அவசியம். மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை கூடும். மன அமைதி கிடைக்கும். வார்த்தைகளில் இனிமை தேவை. உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கும்பம்

இன்றைய செயலில் வெற்றி காண்பீர்கள். நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தைரியமாக முன்னேறுங்கள். இரவு தூக்கம் நன்றாக இருக்கும். நாளைய நாளுக்கு திட்டமிடுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

பணவரவு இருந்தாலும் சேமிப்பு குறையும். குடும்பத்தில் சிறிய மனக்கசப்பு உருவாகலாம். துணையுடன் பேசுவதில் நிதானம் அவசியம். பெற்றோரின் ஆலோசனை பயனளிக்கும். சகோதரர்களுடன் உறவு மேம்படும். நண்பர்களின் உதவி கிடைக்கும். உடல் சோர்வு உணரப்படும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here